தேர்தல் விதிமுறை மீறல் : மார்க் லெனினிஸ்ட் செயலாளர் மீது வழக்கு....

தேர்தல் விதிமுறை மீறல் :  மார்க் லெனினிஸ்ட் செயலாளர் மீது வழக்கு....

வழக்கு

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து (59) தலைமையில் 5 வாகனங்களில் சுமார் 100 பேர் வந்துள்ளனர். அவர்கள் திடீரென அந்த பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கினர். மேலும் அனுமதியின்றி துண்டு பிரச்சாரம் வழங்கியதோடு வாகனத்தில் ஒலிபெருக்கியும் வைத்திருந்தனர்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் தற்போது மாவட்ட முழுவதும் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், பாரதிய ஜனதா, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியுடன் மொத்தம் 22 பேர் போட்டியிடுகின்றனர். இதில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியும் போட்டியிடுகிறது. இந்த நிலையில் குருந்தன்கோடு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மைதிலி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் குளச்சலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வாணியக்குடி மீன் சந்தை அருகே சோதனையில் ஈடுபட்ட போது மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து (59) தலைமையில் 5 வாகனங்களில் சுமார் 100 பேர் வந்துள்ளனர். அவர்கள் திடீரென அந்த பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கினர். மேலும் அனுமதியின்றி துண்டு பிரச்சாரம் வழங்கியதோடு வாகனத்தில் ஒலிபெருக்கியும் வைத்திருந்தனர். இது குறித்து பறக்கும் படை அதிகாரி மைதிலி குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tags

Next Story