அரசு உத்தரவை மீறி இயக்கம் - ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்கு சீல்
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே உள்ள வேலன் கண்டிகையில் செயல்படும் துணி ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி குடிநீர் அருந்திய 78 பெண்கள் ஆண்கள் கடும் வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து குடிநீரை பரிசோதனைக்கு அனுப்பி அதன் முடிவு தெரிந்த பிறகு நிறுவனத்தை திறக்க வேண்டும் என சுகாதாரத்துறை மற்றும் கோட்டாட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசின் உத்தரவை மீறி இன்று நிறுவனம் திறக்கப்பட்டு குடிநீரை குடித்ததால் 15 க்கும் மேற்பட்ட பெண்கள் வாந்தி, கடும் வயிற்று வலி, மற்றும் மயக்கம் ஏற்பட்டு நடமாடும் ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு அத்திமாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதனையடுத்து ஏற்கனவே குடிநீர் பிரச்சனையால் பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் சுகாதார துறையினர் எச்சரித்தும், விதிமுறைகளை மீறி நிறுவனத்தை திறந்த நிர்வாகத்தை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
. மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடி தீர்வு காணாவிட்டால் இந்த கம்பெனியில் வேலை செய்யும் பெண்கள் உயிரோடு விளையாடுவதாக உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் கம்பெனியில் உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே குடிநீர் பரிசோதனை அறிக்கை விவரம் வரும்வரை கம்பெனி இயங்கக் கூடாது என்று துணி ஏற்றுமதி நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கி வருவாய் கோட்டாட்சியர் தீபா உத்தரவிட்டார்.