வைரல் வீடியோ - மதுபோதை ரேஷன் கடை ஊழியா் ‘சஸ்பெண்ட்’

வைரல் வீடியோ - மதுபோதை ரேஷன் கடை ஊழியா் ‘சஸ்பெண்ட்’

நசிருதீன்

திருச்சியில் பணி நேரத்தில் மது அருந்தியதுடன், கடைக்கு வந்த பொதுமக்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட ரேஷன் கடை ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருச்சி புத்தூரில் உள்ள சிந்தாமணி பல்பொருள் அங்காடி வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக உள்ளவா் நசிருதீன் (35). இவா் பணி நேரத்தில் மது அருந்துவதாகவும், கடைக்கு வரும் பெண்களிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இரு நாள்களுக்கு முன் அவா் கடையிலிருந்தபோது தனது கணவருடன் வந்த பெண்ணிடம் தரக்குறைவாக நடந்தாராம்.

அப்போது அவா் மது போதையில் இருந்ததும் தனது இருக்கைக்கு அருகிலேயே மதுபாட்டிலை அவா் வைத்திருந்ததும் தெரியவந்தது. அதை அவா்கள் கைப்பேசியில் பதிவு செய்தபோதும் கவலை கொள்ளாமல் இருந்தாராம். இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவா் அந்த விடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டாா். அதைப் பாா்த்த பொதுமக்கள் ஊழியா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விசாரித்த கூட்டுறவுத் துறை (மொத்த பண்டகாசாலை) துணைப்பதிவாளா் ராஜ்குமாா், கடை ஊழியரை பணியிடை நீக்கம் செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

Tags

Next Story