விராலிமலை 4004 பெண்கள் பங்கேற்ற மார்கழி மாத மகா விளக்கு பூஜை

விராலிமலை 4004 பெண்கள் பங்கேற்ற மார்கழி மாத மகா விளக்கு பூஜை

விளக்கு பூஜை

விராலிமலை 4004 பெண்கள் பங்கேற்ற மார்கழி மாத மகா விளக்கு பூஜை மக்களவை உறுப்பினர் செல்வி ஜோதிமணி தொடக்கிவைத்தார்.
மார்கழியில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமை என 9 பூஜைகள் நடைபெற உள்ளது. விராலிமலை அம்மன் கோயிலில் மார்கழி மாதம் முழுவதும் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் திருவிளக்கு பூஜை இன்று மங்கள இசையுடன், பக்தி பாடல்கள் பாடி ஆயிரக்கணக்கான பெண்கள் விளக்கு பூஜையில் பங்கேற்று வழிபட்டனர். விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும் சுற்றுப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும்,குலதெய்வமாகவும் விளங்கும் அம்மன் கோயிலில் வருடம் முழுவதும் பல்வேறு விழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதேபோல மார்கழி மாதம் முழுவதும் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை நடைபெறும் 34 ம் ஆண்டு திருவிளக்கு பூஜை தொடங்கியது. இப்பூஜை வரும் தை மாதம் 1ம் தேதி நிறைவடைகிறது. மொத்தம் ஒன்பது விளக்கு பூஜையின் முதலாவது திருவிளக்கு பூஜை கோமாதா பூஜையுடன் இன்று தொடங்கியது. இதில் 4004 பெண்கள் பங்கேற்று அம்மன் பக்தி பாடல்களை பாடி விளக்கு பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டனர். விழா நாட்களில் அம்மன் வெள்ளி கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story