திறந்த வெளி பாராக மாறிய விராலிமலை பஸ் ஸ்டாண்ட்!

விராலிமலை பஸ் ஸ்டாண்ட் திறந்த வெளி பாராக மாறியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
விராலிமலையில் வசிக்கும் பொது மக்களின் நலன் கருதி சந்தப்பேட்டையில் புதிய பஸ் ஸ்டாண்ட் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது இந்த புதிய பஸ் ஸ்டாண்டிற்குள் அரசு டவுன் பஸ்கள் மட்டுமே வந்து செல்கிறது. புறநகர் மற்றும் தனியார் பஸ்கள் உள்ளே வராமல் வெளியேவே நின்று பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன. இதனால் பஸ்ஸுக்காக காத்திருப்போர் பஸ் ஸ்டாண்டை புறக்கணித்துவிட்டு கடைவீதி, செக்போஸ்ட் பகுதிகளில் காத்திருந்து வருகின்றனர். கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள் ஓய்வு எடுப்பதற்கு இடமில்லாமல் அவதிக்குள்ளாகின்றனர். பஸ்கள் வந்து செல்லாததால் புதிய பஸ் ஸ்டாண்ட் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. வளாகத்திற்குள் உள்ளே உள்ள கடைகள் அனைத்தும் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பகலிலேயே திறந்த வெளி பாராக பஸ் ஸ்டாண்ட் பயன்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் புகார் தெரிவித்தால் ஒரு வாரம் வரை அனைத்து பஸ்களும் வந்து செல்லும் அதன் பின்னர் மீண்டும் வராத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே நிரந்தரமாக பஸ் ஸ்டாண்ட் செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

Next Story