விராலிமலை ஆட்டுச் சந்தை : ரூ.1 கோடியை தாண்டிய வர்த்தகம் !
விராலிமலையில் ஆட்டுச் சந்தையில் ரூ. 1 கோடியை தாண்டி வர்த்தகம் நடைபெற்று வருகிறது
விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளில் இயற்கையான முறையில் வளர்க்கப்படும் ஆடுகளை வாங்குவதற்கு பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இறைச்சிக்கடை வியாபாரிகள் முதல் நாள் இரவோடு இரவாக இங்கு வந்து தங்கி ஆடுகளை வாங்கி செல்வது தனி சிறப்பாகும்.
பல்வேறு ஊர் பகுதியில் கிராம கோவில்களில் சித்திரை திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் விலையையும் பொருட்படுத்தாமல் ஆடுகளை வாங்கி செல்கின்றனர். ரூபாய் 6000திற்கு விற்கப்படும் ஆடுகளின் விலை 8,௦௦௦க்கும், 8,000க்கு விற்கப்படும் ஆட்டின் விலை 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது கடந்த சில வாரங்களாக களை இழந்த ஆட்டுச் சந்தை தற்போது மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
Next Story