விராலிமலையில் முருகன் கோயில் வைகாசி விசாக தெப்பத் திருவிழா!

விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

விராலிமலையில் முருகன் கோயில் வைகாசி விசாக தெப்பத் திருவிழா நடைபெற்றது. பல்வேறு சிறப்புடைய இக்கோயில் வைகாசி விசாக திருவிழாவில் புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, விழாவின் 10-ஆம் நாளான வியாழக்கிழமை மதுரை சாலையில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்ஸவம் நடைபெற்றது. முன்னதாக, மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில்அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மாலை 5 மணியளவில் முருகன் வள்ளி, தேவசேனா சமேதராக மங்கள வாத்தியங்கள் முழங்க எழுந்தருளினார்.

தெப்பக்குளத்தில் நீர் குறைவாக இருந்ததால், நிலை தெப்பமாக விழாவில் நடத்தப்பட்டது. வழக்கமாக இரவில் நடைபெறும் இந்த விழா, மழை முன்னெச்சரிக்கையாக மாலையில் நடத்தப்பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று 'அரோகரா' சரண கோஷத்துடன் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, வெள்ளி மயில் வாகனத்தில் தெப்பக்குளத்தில் இருந்து புறப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.வைகாசி விசாக திருவிழாவின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (மே 24) தீர்த்தவாரி நடைபெறுகிறது.

Tags

Next Story