விராலிமலை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை!

விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீர் கோடை மழை தொடங்கி ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக விராலிமலை அதன் சுற்றுவட்டார பகுதிகளான இலுப்பூர், அன்னவாசல் போன்ற பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் ரோடுகளில் தண்ணீர் ஆறு போல் ஓடியது. இம்மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags

Next Story