டிஎன்டிஜே சார்பில் நல்லொழுக்கப் பயிற்சி முகாம்
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத். ஜமாஅத் சார்பில், நல்லொழுக்கப் பயிற்சி முகாம் மற்றும் குடும்பவியல் தர்பியா, பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட தலைவர் அப்துல் நாசர், மாவட்ட செயலாளர் பைசல் நிசார் ஆடியோர் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், மாநிலப் பேச்சாளர் ஃபாருக், மாநில துணைத் தலைவர் அப்துர் ரஹீம் , மாநில தணிக்கைக் குழு தலைவர் அல் அமீன் , மாநில செயலாளர் சுலைமான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
இதில் பாபர் மசூதியை அடுத்து உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியை குறிவைத்து தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கும் வழிபாட்டுத்தல பாதுகாப்பு சட்டத்திற்கும் எதிரான முறையில் பள்ளிவாசல் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நேரத்தில் பள்ளிவாசல் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத்தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டதலைநகரங்களிலும் அமைதிப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டு. வரும் பிப்ரவரி 10ம் தேதி சனிக்கிழமை பெரம்பலூரில் அமைதிப் பேரணி நடத்துவ. வாக்கு சீட்டு முறையை அமல்படுத்த கோருவது, இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க செய்ய வேண்டும், இஸ்ரேலின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்,
நீண்டகால முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட . தீர்மானங்கள் இந்நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியின் போது மாநில மாவட்ட நிர்வாகிகள் இஸ்லாமிய பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.