விருதுநகர் : 400 கிராம ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம்
விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 400 கிராம ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் 450 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளை வருமானம் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர் அதிக வருமானம் தரும் ஊராட்சிகளை A பிரிவிலும் அதைத் தொடர்ந்து வருமானம் தர கூடிய ஊராட்சிகளை b,c,d என்ற நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஊராட்சி களில் பல ஆண்டுகளாக ஒரே ஊராட்சியில் பணிபுரியும் கிராம ஊராட்சி செயலாளர்கள் மற்றும் புகாரின் அடிப்படையில் சில ஊராட்சி செயலாளர்கள் என 400 ஊராட்சி செயலாளர்களை இன்று ஒரே நாளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Next Story