அதிமுகவை சார்ந்த இரு கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்ததால் அதிர்ச்சி

அதிமுகவை சார்ந்த இரண்டு மாவட்ட கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்ததை அடுத்து மாதாந்திர மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டம் பரபரப்பாக நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாதத்திற்கான மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டம் மாவட்ட ஊராட்சி பெருந்தலைவர் வசந்தி மான்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 20 மாவட்ட கவுன்சிலர்களில் எட்டு மாவட்ட கவுன்சிலர்கள் திமுகவைச் சார்ந்தவர்களாகவும், 10 மாவட்ட கவுன்சிலர்கள் அதிமுகவை சார்ந்தவர்களும் உறுப்பினராக இருந்து வந்த நிலையில், அதிமுகவைச் சார்ந்த வசந்தி மான்ராஜ் என்பவர் மாவட்ட ஊராட்சி பெருந்தலைவராக பொறுப்பில் இருந்தார். இறுதியில் திமுக சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் முன்னிலையில் சிவகாசி ஒன்றிய பகுதியைச் சார்ந்த அதிமுக நாலாவது வார்டு மாவட்ட கவுன்சிலர் வேல்ராணி வெங்கடேஷ் மற்றும் பதினெட்டாவது வார்டு கவுன்சிலர் மாலதி நல்லதம்பி ஆகிய இருவரும் திமுகவில் இணைந்தனர்.

இதை தொடர்ந்து மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் அதிமுக மாவட்ட கவுன்சிலர்களின் எண்ணிக்கை எட்டாக குறைந்து திமுக மாவட்ட கவுன்சிலர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் அதிமுக மாவட்ட ஊராட்சி பெருந்தலைவர் வசந்தி மான்ராஜ் மீது திமுகவினர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவார்கள் என இன்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாவட்ட ஊராட்சி பெருந்தலைவருக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வராமல் கடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கான பணிகள் ஏன் நடைபெறவில்லை. அதற்காக நிதி ஒதுக்கப்பட்டும் பணி ஆணை வழங்கப்படாமல் ஏன் கால தாமதம் படுத்தப்படுகிறது என திமுக மாவட்ட கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு மாவட்ட கவுன்சிலர்கள் பெருந்தலைவர் பதில் அளிக்க வேண்டும் என தொடர்ந்து திமுக மாவட்ட கவுன்சர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் மாவட்ட ஊராட்சி பெருந்தலைவர் வசந்தி மான்ராஜ் கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Tags

Next Story