முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் அடையாள அட்டை

முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் அடையாள அட்டை
முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் அடையாள அட்டை
முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யும் சிறப்பு முகாமில் பயனாளிகளுக்கு அடையாள அட்டை.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் செட்டியார்பட்டியில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் பயனாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற முகாமில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் பதிவு செய்த பயனாளிகளுக்கு, இரண்டாம் கட்டமாக 1100 நபர்களுக்கு காப்பீட்டுத்திட்டத்தின் அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதை தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் M.குமார் மற்றும் தங்கப்பாண்டியன் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின்மூலம் 5 லட்ச ரூபாய் பொதுமக்களின் கையில் இருப்பதுபோல் தங்களின் அவசர மருத்துவத்தேவைக்காக காப்பீட்டு அட்டையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் எனக் கூறினார். பாராளுமன்ற உறுப்பினர் தனுஸ் M குமார் பேசியபோது, தமிழ்நாட்டில் இராஜபாளையத்தில் தான் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டையை தான் அனைத்து பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது எனவும், அதுபோல் உயர்சிகிச்சைகாக மதுரை பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு செல்லாமல் ராஜபாளையம் அரசு மருத்துவமனையிலேயே உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து பணிகளை சட்டமன்ற உறுப்பினர் துரிதப்படுத்தி வருகிறார் என்றார்.


Tags

Next Story