என் வாக்கு விற்பனைக்கு அல்ல - விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல -  விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்
X
 ஸ்டிக்கர் ஓட்டும்  ஆட்சியர்
வாக்காளர்களிடம் எளிமையாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து அரசு வாகனங்கள் மற்றும் பேருந்துகளிலும் "என் வாக்கு விற்பனைக்கு அல்ல"- என்ற ஸ்டிக்கரை ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்
பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து 100 சதவிகித வாக்குப்பதிவு மற்றும் வாக்காளர்கள் நேர்மையாக வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.அதன் ஒருபகுதியாக இன்று விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனையில் மாவட்ட ஆட்சியரும்,தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயசீலன் தலைமையில் பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக "என் வாக்கு விற்பனைக்கு அல்ல" என்ற ஸ்டிக்கரை அரசு வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் ஒட்டப்பட்டது.இதன் மூலம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்றும் நேர்மையான தேர்தலை முன்னிறுத்தி தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியரும்,தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயசீலன் தெரிவித்தார்.

Tags

Next Story