இந்திய விமானப்படையில் சேர விருப்பமா

இந்திய விமானப்படையில் சேர  விருப்பமா
விருதுநகர் ஆட்சியr
இந்திய விமானப்படை ஆள்சேர்ப்பில் அக்னிவீர் வாயு வேலைவாய்ப்புத் தேர்விற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப் படை ஆள்சேர்ப்பில் அக்னிவீர்வாயுத் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு 08.07.2024 முதல் 28.07.2024 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு 03.07.2004 முதல் 03.01.2008 வயது வரையுள்ள திருமணமாகாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வுக்கு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் தேர்ச்சி அல்லது மூன்று வருடம் டிப்ளோ என்ஜீனியரிங் துறையில் 50 சதவீதம் தேர்ச்சி அல்லது 2 வருடம் கணிதம் மற்றும் இயற்பியல் தொடர்பான தொழில்துறையில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கு உடல்தகுதி ஆண்களுக்கு 152.5 செ.மீ , பெண்களுக்கு 152 செ.மீ வும் உடலுக்கேற்ற எடை இருத்தல் அவசியம்.

இந்த பணியிடத்திற்கு மேற்கண்ட தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வினில் முதல் தகுதிச்சுற்று ஆன்லைனில் கொள்குறித்தேர்வாகவும் இரண்டாம் தகுதிச்சுற்று உடற்தகுதித் தேர்வாகவும் நடைபெறும். இத்தேர்வுக்கு சம்பளமாக முதல் வருடம் 30,000 லிருந்து நான்காம் வருடம் 40,000 வரை வழங்கப்படுகிறது. மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.550 (ஜி.எஸ்.டி உட்பட) ஆன்லைனில் செலுத்த வேண்டும். இதில் தகுதியுள்ள பெண்கள் / ஆண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்கள்.

Tags

Next Story