அதானி, அம்பானிக்கு 17 லட்சம் கோடி கடன் தள்ளுபடி - புண்ணியவான் மோடி

அதானி, அம்பானிக்கு  17 லட்சம் கோடி கடன் தள்ளுபடி - புண்ணியவான் மோடி

மாணிக்கம் தாகூர் 

நாடாளுமன்ற தேர்தல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் திருப்பரங்குன்றம் தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார். திருப்பரங்குன்றம் கோவில் அருகே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தமிழக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மூவருக்கும் வீரவாள், ஆள் உயர மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து., பொதுமக்களிடம் விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பேசுகையில்._ இந்த தேர்தல் என்பது டெல்லிக்கான தேர்தல். டெல்லியில் உங்களின் குரலாக யார் இருக்க வேண்டும் என்பது. டெல்லியில் ஒலிக்கின்ற குரல் மதுரை, விருதுநகர் தமிழ்நாட்டின் குரலாக இருக்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை விமான நிலையம் என இப்படி மிக முக்கிய மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் செயல்படாமல் கைவிடப்பட்டு இருக்கிறது. மோடி அரசு எய்ம்ஸ் மருத்துவமனையை வெறும் செங்கல்லுடன் வைத்திருந்ததை., தமிழக அமைச்சர் உதயநிதி கடந்த தேர்தலில் உங்களுக்கு எழுமையாக புரிய வைத்தார்.

ஒவ்வொரு முறை எய்ம்ஸ் என்ற வார்த்தையை காட்டி நம்மளை ஏமாற்றுகிறார்கள். எய்ம்ஸ் கட்டப்பட்டு விட்டதா என்றால் வெறும் செங்கல் மட்டுமே உள்ளது மதுரை விமான நிலையம் இரவு 10 மணிக்கு எல்லாம் மூடப்படுகிறது. 24 மணி நேர விமான சேவையை மோடி அரசு நிறுத்தி வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் விடியல் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மகளிர் உரிமைத் தொகை., அரசு பணம் பெண்கள் கையில் இருக்க வேண்டும் என்பதற்காக ஏழை எளிய பெண்களுக்கு கொண்டு வந்த ஒரு உன்னதமான திட்டம். மாதாமாதம் பெண்களுடைய உரிமை தொகை வழங்கும் திட்டத்தை எந்த அரசும் முன்வரவில்லை இதுவரை இல்லாத ஒரு புரட்சியை தமிழகமும் கர்நாடகா அரசும் செய்திருக்கிறது.

இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என ராகுல் காந்தி நினைக்கிறார் ராகுல் காந்தி பிரதமர் ஆனால் பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டத்தை செயல்படுத்த இருக்கிறார். ஏழை எளிய பெண்களுக்கு சகோதரனாக அண்ணனாக தந்தையாக பெண்களின் வீட்டுச் சுமையை குறைக்க தளபதி செயல்பட்டு இருக்கிறார். இவர்களைப் போன்றவர்கள் பிரதமராகவோ அல்லது முதல்வராகவோ வந்தால் உங்கள் பிரச்சினையை சரி செய்ய முடியும்.

இப்போது உள்ள மோடி அரசு அதானிக்கும் அம்பானிக்கும் உதவுகிற அரசாக 17 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்திருக்கிறது. 17 × 14 முறை பூஜ்யம் சேர்த்தல் 17 லட்சம் கோடி வரும். 17 லட்சம் கோடியை தள்ளுபடி செய்த புண்ணியவான் மோடி. இந்த மோடி அரசு மக்களிடம் கொள்ளை அடித்த பணத்தை பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் உயர்த்தி அந்த பணத்தை அதானிக்கும் அம்பானிக்கும் வழங்கி இருக்கிறது. 450 ரூபாய் இருந்த கேஸ் சிலிண்டர் விலையை இன்றைக்கு ஆயிரம் ரூபாயாக உயர்த்திய அரசு மோடி அரசு. தற்போது கேஸ் சிலிண்டர் விலையை தேர்தலுக்காக 100 ரூபாயை குறைத்து இருக்கிறது. உங்களிடமிருந்து 450 ரூபாய் திருடுகின்ற மோடி அரசு உங்களிடம் கொடுக்காமல் உங்களுடைய காசை எடுத்து அதானிக்கும் அமானிக்கும் கொடுக்கிறது.

மறுபக்கம் அரசு பணத்தை எடுத்து மக்களிடம் கொடுக்கிறார் ஸ்டாலின்., தமிழக அரசு கொடுக்கின்ற பணத்தை பிடுங்குகிற அரசாக மத்திய அரசு இருக்கிறது. மோடி வீட்டுக்கு சென்றால் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாயாக குறையும்., 500 ரூபாய்க்கு சிலிண்டர் விற்கப்படவேண்டும் என்றால் கை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார். _

தொடர்ந்து பேசிய தமிழக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறுகையில்._ மதுரை மண்ணுக்கு சொந்தக்காரர் மாணிக்கம் தாகூர்., கடந்த முறை (மாப்பிள்ளை) வேட்பாளர் அறிவிக்கும்போது வட இந்தியா காரனை கொண்டு வந்து அறிவித்துவிட்டார்களே என இருந்தார்கள்.தமிழ் மொழி மீது இருந்த பற்றின் காரணமாக தமிழ் மொழி ஆர்வம் காரணமாக இந்த பெயர் அவருக்கு சூட்டப்பட்டுள்ளது. அப்புறம் நான் தான் நிர்வாகியிடம் சொன்னேன் அவன் என் மாப்பிள்ளை என்று. அன்று முதல் இன்று வரை தொகுதி மக்களிடம் ஒரு சமூகமான உறவோடு இருப்பது நான் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். முதல் செயல்வீரர் கூட்டம் விருதுநகர் வைக்கவில்லை என்றாலும் முதன் முதலாக திருப்பரங்குன்றத்தில் குடி கொண்டுள்ள முருகன் இடத்தில் வைக்க வேண்டும் அவரது அருளால் ஆசிர்வதித்தால் இந்த இடத்தில் தொடங்குவோம். திருப்பரங்குன்றத்தில் ஒரு இடைத்தேர்தல் வந்தது அப்போது அதிமுக ஆளுகின்ற கட்சி., திமுக இடைத்தேர்தலில் நின்று எப்படி ஜெயிக்க போறோம் என சொன்னார்கள்.? ஆனால்., எப்படியோ மக்களின் செல்வாக்கில் முருகன் அருளால் வெற்றி பெற்றோம்.

தமிழ்நாடே எதிர்பார்க்கவில்லை அப்படி ஒரு புண்ணியவானனை (மதுரை அதிமுக பாஜக வேட்பாளர் டாக்டர் சரவணன் - மறைமுகமாக சுட்டிக் காட்டிய அமைச்சர்) ஜெயிக்க வைத்தை இந்த நாடு முழுவதும் இந்த மக்களுக்கும் நன்றாக தெரியும்._ அப்படிப்பட்டவரை நாம் ஜெயிக்கி வைக்கும் போது உங்களோடு இருக்கக்கூடிய மாணிக்கத் தாகூரை நீங்கள் நிச்சயமாக ஜெயிக்க வைப்பீர்கள். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியுடன் நான் காரில் சென்ற போது ஒட்டுமொத்தமாக திராவிட மாடல் ஆட்சி செய்யும் பொழுது அனைத்து குடும்ப தளபதிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் சில இ சேவை மையங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தவறுகளால் சிலரை தகுதி நீக்கம் செய்ததாகவும் 700 கோடி ரூபாய் இத்திட்டத்திற்கு உயர்ந்தாலும் அனைவருக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் முடிந்த பின்னால் தகுதியுடைய அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் சென்றடைய ஏற்பாடு செய்யவுவதாகவும் தெரிவித்தார். கடந்த மூன்று ஆண்டுகளில் 70 ஆயிரம் கோடி கடன் கொடுத்து பல குடும்பங்கள் இன்றைக்கு தொழில் செய்து கொண்டிருக்கிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் உயர் கல்விக்கு கடன் கொடுத்துள்ளது. இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய தலைவராக உறுதுணையாக உள்ளவர் தமிழக முதல்வர் அவருடைய ஆதரவோடு விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மாணிக்கம் தாகூரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெடையசெய்து கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து நிர்வாகிகளை பார்த்து அமைச்சர் கூறும் போது இது வெறும் செயல்வீரர்கள் கூட்டம் தான் மேடையில் ஏறி சால்வை போடுவதாலோ அல்லது பக்கத்தில் நிற்பதால் கட்சியில் நல்ல பேர் எடுக்க முடியாது. இதுதான் உங்களுக்கு முதலும் கடைசியும் இனிமேல் நாங்கள் உங்களை ஏப்ரல் 19ஆம் தேதி வரை தொகுதியில் தான் பார்க்க வேண்டும் பொறுப்பாளர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்களை சந்தித்து மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என்றார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களில் மாணிக்கம் தாகூர் தான் அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடிக்க வேண்டும் அதற்கு உழைக்க வேண்டும் என்றார்.

Tags

Next Story