கிராமம்,கிராமமாக காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழக முழுவதும் வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சியினர் வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாகூர் எம்.பி கை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் விருதுநகர் நாடாளு மன்ற தொகுதி முழுக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மாணிக்கம் தாகூர் வெம்பக்கோட்டை பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது இறவார்பட்டி கிராமத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பிரச்சாரத்தின் போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய மாணிக்கம் தாகூர் மோடி அரசு தொடர்ந்து பணக்காரர்களுக்காக மட்டுமே வேலை செய்கிற அரசாக இருக்கு என்றார்.

மேலும் பட்டாசு தொழிலை அழிக்க மோடி அரசு முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டிய மாணிக்கம் தாகூர் பட்டாசு தொழிலை பாதுகாக்க பட்டாசு தொழிலை நம்பி இருக்கிற குடும்பங்களை காப்பாற்ற அதற்கு நல்லாட்சி அமைய கைச்சின்னத்தில் வாக்கு அளித்து ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்றார். ராகுல் காந்தி பிரதமராக வரும் போது பட்டாசு தொழில் காப்பாற்றப் படும் என்றார்.

மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் மத்தியில் இந்தியா கூட்டணியில் ராகுல் காந்தி பிரதமராக வந்த உடன் 10 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் மகாலட்சுமி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்றார். மேலும் பட்டாசு தொழிலை பாதுகாப்பான தொழிலாகவும் வைத்திருக்க வேண்டும் அதே நேரத்தில் பட்டாசு தொழிலுக்கான பிரச்சனைகளை தீர்க்க மத்தியில் ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என்றார்.

Tags

Next Story