மாவட்ட நீதிமன்றத்தில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்ததால் பரபரப்பு

தீக்குளித்தவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர், திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்து கொண்டார்.

அருகில் இருந்தவர்கள் சந்திரசேகர் உடலில் பற்றி எரிந்த தீயை அனைத்து அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்திரசேகர் உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

சந்திரசேகர் எதற்காக நீதிமன்றம் வந்தார், எதற்காக தீ வைத்துக் கொண்டார் என்று நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் விருதுநகர் மேற்கு காவல்நிலையத்தில் அவர் மீது ஒரு வழக்கு உள்ளதாகவும், கோவில்பட்டியில் ஒரு வழக்கு உள்ளதாகவும், மொத்தம் அவர் மீது மூன்று வழக்குகள் உள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீவைத்து கொண்ட இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story