விருதுநகர் மாவட்ட முதலீட்டாளர்கள் கள நிகழ்வு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட  முதலீட்டாளர்கள்  கள நிகழ்வு நிகழ்ச்சி
முதலீட்டாளர்கள் கள நிகழ்வு நிகழ்ச்சி 
தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு விருதுநகரில் மாவட்ட தொழில் மையம் சார்பில் மாவட்ட முதலீட்டாளர்களுடன் கள நிகழ்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 114 நிறுவனங்கள் மூலம் ரூ. 1524.82 கோடி ரூபாய் அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டப்பட்டன. மேலும் இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான சிறு குறு தொழில் முதலீட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பத்துக்கு மேற்பட்ட சிறு குறு முதலீட்டாளர்களுக்கு தமிழக வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் நலத்திட்ட உதவி களை வழங்கினார்.

Tags

Next Story