விருதுநகர்: விவசாயிகள் வேதனை

கோடை வெப்பத்தின் எதிரொலியாக விருதுநகர் மாவட்டத்தில் வெள்ளரிக்காய் விளைச்சல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வெள்ளரிக்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றன.

தற்போது சுட்டெரிக்கும் கோடை வெயிலால் சாகுபடிக்கு தயாரான வெள்ளரிக்காய்கள் பிஞ்சிலேயே வெதும்பி விடுகின்றன. இதனால் காய்கள் வரத்து குறைந்துள்ளது.

கோடை காலம் தொடங்கி உள்ளதால் சாத்தூர் பகுதியில் விளையும் வெள்ளரிக்காய்களை விவசாயிகள் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றன. ஒரு கூறு வெள்ளரிக்காய் ரூபாய் 30 முதல் 50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சாத்தூர் வெள்ளரிக்காய் தனி தன்மையுடையது என இப்பகுதி விவசாயிகள் தெரிகின்றன. இதனால் பொதுமக்களும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் வெள்ளரிக்காய்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து பேசிய வெள்ளரிக்காய் விவசாயி மீனாட்சி கூறியதாவது, "கோடை காலம் தூங்குவதற்கு முன்பாக வெள்ளரிக்காய் விளைச்சல் நன்றாக இருந்தது. தற்போது வெயில் வாட்டி வதைப்பதால் வெள்ளரி செடியில் உற்பத்தியாகும் பிஞ்சுகள் வெதும்பி விடுகிறது. இதனால் காய்கள் வருவது குறைந்து விடுகிறது. வெள்ளரிக்காய் ஒரு கூறு ரூபாய் 30 முதல் 50 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளரிக்காய் தேவை அதிகமாக இருந்தும் உற்பத்தி குறைவாக இருக்கிறது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 500 வரை வருமானம் கிடைக்கிறது" என தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story