காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பிரசாரம்
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி இன்று அருப்புக்கோட்டை ஒன்றிய பகுதிகளான சுக்கிலநத்தம், மீனாட்சிபுரம், திருவிருந்தாள்புரம், வெள்ளையாபுரம், குருந்தமடம், ஆமணக்கு நத்தம், வதுவார்பட்டி, போடம்பட்டி, சிதம்பராபுரம், வாழ்வாங்கி மற்றும் செட்டிகுறிச்சி மற்றும் ஆகிய கிராமப் பகுதிகளில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், பெண்கள், விவசாயக் கூலி தொழிலாளிகளை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், விலைவாசி குறைய வேண்டும் என்றால் தற்போது உள்ள மோடி அரசாங்கம் மாற வேண்டும். பத்து வருடங்களாக மோடி அரசாங்கத்தில் விலைவாசி எல்லாம் தாறுமாறாக உயர்ந்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட மகளிர்க்கு தேர்தல் முடிந்த ஒரு மாதத்திற்குள் உரிமைத்தொகை வழங்கப்படும். அதேபோல 100 நாள் வேலைத்திட்டம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் 150 நாளாக சம்பளம் ரூபாய் 400 ஆகவும் உயர்த்தப்படும் என பேசி கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.