விருதுநகர் : பனை விதை நடும் விழா

விருதுநகர் சரஸ்வதி அம்மாள் லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் விருதுநகர் அரிமா விருதுநகர் ஆலமர அமைப்பு இணைந்து, தாதம்பட்டி ஊராட்சி பகுதியில் பனை விதை நடுவிழா நடைபெற்றது. இந்த பனை விதை நடும் விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பாக்கிய செல்வம் தலைமை தாங்கினார். இதில் சரஸ்வதி அம்மாள் லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சுமார் 350 பேர் பனை விதைகளை தாதம்பட்டி ஊராட்சி பகுதியை சுற்றியுள்ள கண்மாய் கரைகளில் நட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் தங்க மாரியப்பன் தாதம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் இலக்கியா முருகன் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் ஆலமர அமைப்பைச் சார்ந்த குழுவினரும் கலந்துகொண்டு பனை விதை நட்டனர்.

Tags

Next Story