விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி பட்டமளிப்பு விழா
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் 74 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் 738 இளநிலை மற்றும் 175 முதுநிலை மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். இதில் கல்லூரி முதல்வர் முனைவர் அ. சாரதி வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவில் கல்லூரி செயலாளர் எம்.டி. சர்ப்பராஜன் பட்டமளிப்பு விழாவினைத் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருநெல்வேவி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் என்.சந்திரசேகர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
அவர் பேசும்பொழுது “மாணவர்கள் தங்கள் ஆழ்ந்த அறிவு, தங்களது தனித் திறமைகள் ஆகியவற்றை அர்ப்பணிப்புடன் முயற்சி செய்து இந்த அருமையான நாளில் தங்கள் ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்போடு இப்பட்டங்களை வாங்குகிறார்கள். மாணவர்கள் தங்கள் மேல் நம்பிக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். எப்பொழுது தங்கள் மேல் நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும். வெற்றியையும் அடைவார்கள். இன்று பட்டம் பெறக்கூடிய அனைத்து மாணவ/மாணவியர்களும் வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் பசியால் வாடுவதோ, சாலைகளில் குடியிருப்பதோ போன்ற இன்னல்களை அடைய மாட்டார்கள். மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகச் சிறந்த வெற்றியைப் பெறுவதற்கும், மிக உயரிய இடத்திற்கு செல்வதற்கும், வாழ்வில் சரியானவற்றை தேர்ந்தெடுப்பதற்கும் இந்த பட்டம் மிக மிக முக்கியம். இன்று பட்டம் பெறும் மாணவர்கள் தங்களது அறிஷையும், ஆற்றலையும், அனுபவத்தையும் யன்படுத்தி வாழ்வில் மிகச் சிறந்த வெற்றியை அடைவார்கள்.
இன்றைய உலகில் மாற்றம் என்பது மிக வேகமாக மாறிக் கொண்டே வருகிறது. மாறி வரும் இவ்வுலகில் தொழில் நுட் உதவியோடு வெற்றி பெறும் மாணவர்களாகிய நீங்கள் இந்தியாவில் இருப்பதால் மி. ம் கொடுத்து வைத்தவர்கள். இந்தியாவில் உள்ள அனைத்து பட்டதாரிகளும் வாய்ப்பு கிடைக்கப் பெறுகின்றனர். தொழில் நுட்ப வசதியோடு, தொழில் நுட்பங்களில் ஏற்படும் மாற்றங்களை முஜையாக பயன்படுத்தி இன்று இளைஞர்களாகிய நீங்கள் இக்கல்லூரியில் பட்டம் பெற்றுள்ள நீங்கள் மிக உயர்ந்த பணிக்கு செல்லவும், இந்திய திருநாட்டில் மிக வளமான வாழ்வையும், நலத்தையும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
இறுதியாக கல்லூரி முதல்வர் முனைவர் அ. சாரதி நிறைவுறை ஆற்றினார் . இவ்விழாவில் கல்லூரி பரிபாலன சபைத் தலைவர் வி. பழனிச்சாமி, உப தலைவர்கள் என். ராஜ்மோகன், ஜி. ரம்யா, கல்லூரிப் பொருளாளர் எஸ். சக்திபாபு, கல்லூரித் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் அ. சக்திவேல், கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ. காளிதாஸ் நன்றி கூறினார்.