விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி விளையாட்டு விழா
விளையாட்டு விழா
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் 77வது ஆண்டு விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் அ.சாரதி வரவேற்றார். கல்லூரி பரிபாலன சபைத் தலைவர் வி.பழனிச்சாமி தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கல்லூரிச் செயலாளர் எம்.டி.சர்ப்பராஜன் கல்லூரிக் கொடியை ஏற்றி வைத்தார். உபதலைவர் ஜி.ரம்யா ஒலிம்பிக் ஜோதியை பெற்றுக் கொண்டார். கல்லூரி பொருளாளர் எஸ்.சக்திபாபு சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினராக விருதுநகர் நகர் முன்னேற்ற சங்க முன்னாள் தலைவர் வி.பி.பி.கே.சி. குருசாமி கலந்து கொண்டு மாணவ மாணவியர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு விளையாட்டு விழாவினை துவக்கி வைத்துப் பேசினார்.
உடற்கல்வித் துறை இயக்குநர் முனைவர் டி.முருகேசன் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், 5000 மீட்டர் நடை பயணம், கிரிக்கெட், கயறு இழுத்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒட்டு மொத்த புள்ளிகளின் அடிப்படையில் மாணவியர்கள் பிரிவில் ஆரஞ்சு அணியும், மாணவர்கள் பிரிவில் சிவப்பு அணியும் முதல் பரிசினை தட்டிச் சென்றது.
மாணவியர்கள் தனிநபர் சாம்பியன் பட்டத்தை இரண்டாம் ஆண்டு உடற்கல்வி துறை மாணவி பி.முத்து, மாணவர்கள் தனிநபர் சாம்பியன் பட்டத்தை மூன்றாம் ஆண்டு மாணவர் எம்.அபினாஷ்பாபு தட்டிச் சென்றனர்.
சுயநிதி பா டப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் அ.காளிதாஸ் வாழ்த்திப் பேசினார். நிறைவில் உடற்கல்வித் துறை பயிற்றுநர் எம்.ராம்குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ/மாணவியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.