விருதுநகரில் கள்ளச்சந்தையில் மது விற்றால் கடும் நடவடிக்கை
மாவட்ட எஸ்பி
விருதுநகரில் 9 ஆய்வு குழு போலி மதுபானம் கள்ளச் சந்தையில் மது விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக விருதுநகரில் கள்ளச்சாராயம் மற்றும் மெத்தனால் பயன்பாடு குறித்து 9 குழுக்கள் மூலம் ஆய்வு-எஸ்பி பேரோஸ்கான் அப்துல்லா தகவல் மது விலக்கு அமலாக்கத் துறையின் சிறப்பு குழு உள்ளிட்ட 9 மது விலக்கு துறையினர் கொண்ட குழு,
மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் தயாரிப்பு குறித்தும் மெத்தனால் பயன்படுத்தும் ஆலைகள் மற்றும் நிறுவனங்களில் மெத்தனால் இருப்பு, பயன்பாடு, விற்பனை குறித்து விவரங்களை ஆய்வு நடத்தி வருவதாக எஸ்பி தகவல் தெரிவித்துள்ளார். கள்ளச்சாராயம் தயாரிப்பு,
போலி மதுபானம் தயாரிப்பு, கள்ளச் சந்தையில் மது விற்பனை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி பேரோஸ்கான் அப்துல்லா எச்சரிக்கை
Next Story