கணவனால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள சென்ற பெண்

குடும்பப் பிரச்சனை காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி
விருதுநகர் ஏடிபி காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளி. இவருடைய மகள் மஞ்சுளா மஞ்சுளாவுக்கும் விருதுநகரை சார்ந்த மாரிமுத்து என்பவருக்கும் திருமணம் முடிந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், அதை தொடர்ந்து தனது கணவருடன் மஞ்சுளா சேர்ந்து வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி மஞ்சுளா தனது கணவருடன் சண்டை போட்டதால் கொண்டு மீண்டும் தனது தாய் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவருடைய கணவர் மாரிமுத்து வேறு ஒரு பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றதாகவும் அதை பார்த்த மஞ்சுளா கணவரிடம் கேட்டுள்ளார். அதற்கு மாரிமுத்து மஞ்சுளாவை திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் வீட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்த மஞ்சுளாவை அவருடைய உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சையில் உள்ள மஞ்சுளாவின் தாய் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
