விருதுநகர் : அமைச்ச உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம்

விருதுநகர் : அமைச்ச உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம்

திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகரில் தெற்கு மற்று வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் திமுகவின் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமான இளைஞரணி திமுகவினர் கலந்து கொண்டனர். மேலும் விருதுநகர் தெற்கு வடக்கு மாவட்ட கழகம் சார்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இளைஞர் அணிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. பின்னர் இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர்களான கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகிய இருவரும் மருது சகோதரர்கள் போல செயல்பட்டு வருகிறார்கள் என பேசினார். மேலும் திமுகவில் உழைத்தால் யாரும் முன்னேற்றத்திற்கு வரலாம் என்பதற்கு எடுத்துக் காட்டு இளைஞரணி தான் எனவும் இந்தியாவில் பல இயக்கங்களில் இளைஞரணி இருந்தாலும் முதல் முதலாக இந்தியாவில் இளைஞர் அணியை உருவாக்கியவர் கலைஞர் தான் என்றார். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படிப்படியாக உழைத்து முன்னேறி முதல்வர் ஆனார் எனவும் நம்ம தலைவர் மு.க.ஸ்டாலின் யாருடைய காலையும் பிடித்தது முதல்வராக வரவில்லை எனவும் மக்களால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சரானார் என உதயநிதி ஸ்டாலின் கூறினார். மேலும் தமிழகத்திற்கு நீட் விலக்கு என்பது உதயநிதியின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல எனவும் நம்முடைய முதல்வரின் தனிப்பட்ட பிரச்சனை அல்ல எனவும் தமிழக மாணவர்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பிரச்சனை ஆகும் என்றார். நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் அரசியலை புகுத்த வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். மேலும் மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் அதிமுகவின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் குறித்து ஏதும் பேசப்படவில்லை என்றார். ஆனால் சேலத்தில் நடைபெறும் இளைஞரணி 2 வது மாநாட்டில் நமது கொள்கைகள், செயல்பாடுகள் பேசப்படும் ஒரு மாநாடாக அமையும் என்றார். மேலும் மருத்துவத்திற்கான நுழைவு தேர்வை ரத்து செய்தவர் கலைஞர் தான். மேலும் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து குறித்து வாக்குறுதி கொடுத்தது உண்மை தான். ஆனால் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான வேலையில் தலைவரும், நானும் உண்மையாக உழைத்து வருகிறோம் என்றார்., மேலும் பிரதமர் மோடி எங்கு சென்றாலும் திமுகவை பற்றி பேசுகிறார். தமிழ்நாட்டில் திமுக ஒரே குடும்பம் தான் வாழ்கிறது என்கிறார். உண்மை தான் ஒரே குடும்பம் தான் வாழ்கிறது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கலைஞரின் குடும்பம் தான் என்றார் மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின் சிபிஎஸ்இ பாடபுத்தகத்தில் இந்தியா என்பதை மாற்றி பாரதம் என அச்சிட்டுள்ளார் அதற்காக மோடியை பாராட்டலாம் என்றார். மோடியின் ஒன்பது ஆண்டுகால சாதனை என்றால் இதை மட்டும் குறிப்பிடலாம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின் திமுகவினர் நாடகமாடுகிறார்கள் என ஒருவர் கூறி வருகிறார் சசிகலாவிடம் கேட்டால் தெரியும் தமிழகத்தில் யார் மிகப் பெரிய நாடக நடிகர் என கேட்டால் எடப்பாடி பழனிச்சாமியை சொல்வார் காலை பிடித்து ஆட்சியில் அமர்ந்து சசிகலாவையே காலை வாரிவிட்டு கட்சியை விட்டு நீக்கியவர் தான் எடப்பாடி என விமர்சனம் பேசினார். மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அடிமைகளை வீட்டுக்கு அனுப்பியது போல் நடைபெற உள்ள 2024 நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளையும் அவர்களின் எஜமானர்களையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்

Tags

Next Story