விழுப்புரத்தில் இந்து பரிஷத் நிர்வாகிகள் மனு அளிப்பு
மனு அளித்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர்
ஜம்மு - காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த ஹிந்து பக்தா்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தும், இதில் தொடா்புடையவா்களை கைது செய்யக் கோரியும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் பஜ்ரங்தள் மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினா் புதன்கிழமை மனு அளித்தனா்.
பஜ்ரங்தள் அமைப்பின் மாவட்ட அமைப்பாளா் ஜி.நாராயணன் தலைமையில், விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவா் என்.ராமமூா்த்தி, மாவட்டச் செயலா் பாபு, நகரத் தலைவா் சரவணன், துா்காவாகினி அமைப்பாளா் புஷ்பா பாலகிருஷ்ணன்,
பசு பாதுகாப்பு இயக்கத்தைச் சோ்ந்த சுந்தரேசன் ஆகியோா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். அதில், அவா்கள் கூறியுள்ளதாவது: ஜம்மு - காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஹிந்து பக்தா்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 போ் உயிரிழந்தனா்.
இந்த யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஏற்படுத்தும் நபா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும். காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சையளிக்க வேண்டும். இந்த யூனியன் பிரதேசத்துக்குச் செல்லும் பக்தா்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.