விழுப்புரத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு ஆலோசனைக்கூட்டம்

விழுப்புரத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு ஆலோசனைக்கூட்டம்

ஆலோசனைக்கூட்டம்

விழுப்புரத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் பங்கேற்பு.
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் புதுச்சேரி கோட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அகில இந்திய துணை பொதுச்செயலாளர் ஸ்தாணுமாலயன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசு கையில், இன்றைய சூழ்நிலைக்கு ஏற்பவும், நாட்டில் சனாதனத்தையும், இந்து தர்மத்தையும் காக்க வேண்டும் என்று கூறும் அரசியல் கட்சிக்கு அனைத்து இந்து மக்களும் வாக்களிக்க வேண்டும், இத்தேர்தலில் இந்து மக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து, நடந்த கூட்டத்தில், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் 60-வது ஆண்டையொட்டி அனைத்து பகுதிகளிலும் நகர, ஒன்றிய கமிட்டி அமைப்பது, அந் தந்த கிராமங்களில் நமது கிளைகளில் ராம உற்சவம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தலைமை மாநில செயற்குழு உறுப்பினர் ஞானகுரு, அம்மணி அம்மன், பூசாரிகள் பேரவை மாநில செயலாளர் ரமேஷ், சமுதாய நல்லிணக்க அமைப்பின் மாநில அமைப்பாளர் லட்சுமி நாராயணன், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட நிர்வாகி ராமமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story