காதலர் தினத்தை முன்னிட்டு விஸ்வ ஹிந்து பரிஷத் போராட்டம்

காதலர் தினத்தை முன்னிட்டு விஸ்வ ஹிந்து பரிஷத் போராட்டம்

காதலர் தினத்தை முன்னிட்டு மதுரை ராஜாஜி பூங்காவில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

காதலர் தினத்தை முன்னிட்டு மதுரை ராஜாஜி பூங்காவில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

மதுரை ராஜாஜி பூங்காவில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காதலர்களை ஆபாசமாக திட்டி விரட்டி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி விசுவ ஹிந்த் பரிசத் அமைப்பினர் 10 பேர் கைது காதலர் தினத்தினை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள ராஜாஜி பூங்காவில் விசுவ ஹிந்த் பரிஷத் அமைப்பினர் இன்று காதலர் தின எதிர்ப்பு போராட்டம் நடத்தினர்.

விசுவ ஹிந்த் பரிஷத் அமைப்பினர் ராஜாஜி பூங்காவிற்கு சென்று அங்கு காதலர்கள் இருக்கிறார்களா என தேடித்தேடி பார்த்தனர். அப்போது பூங்காவிற்குள் இருந்த ஒரு காதல் ஜோடியை பார்த்த விசுவ ஹிந்த் பரிஷத் அமைப்பினர் காதலர்களை ஆபாசமாக பேசி மிரட்டி விரட்டினர். இதனை பார்த்த காவல்துறையினரும் காதலர்களை பூங்காவில் இருந்து வெளியேறச் சொல்லி அனுப்பி வைத்தனர்.

இதனால் அச்சத்துடன் அங்கிருந்து காதலர்கள் ஓடிச்செல்லும் நிலை ஏற்பட்டது. முன்னதாக விசுவ ஹிந்த் பரிஷத் அமைப்பினர் ராஜாஜி பூங்காவின் முன்பாக காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விசுவ இந்து பரிசத் அமைப்பினர் 10 பேரை தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Tags

Next Story