20 புனிதர்களின் திருப்பண்டங்கள் வருகை

20 புனிதர்களின் திருப்பண்டங்கள் வருகை

மறவபட்டியில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலயத்துக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து இயேசுவின் 12 சீடர்கள் உள்ளிட்ட 20 புனிதர்களின் திருப்பண்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மறவபட்டியில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலயத்துக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து இயேசுவின் 12 சீடர்கள் உள்ளிட்ட 20 புனிதர்களின் திருப்பண்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு அடுத்த மறவ பட்டியில் புனித அடைக்கல மாதா ஆலயம் மற்றும் புனித சந்தியாகப்பர் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு புதிதாக உயிர்த்த ஆண்டவர் கெபி கட்டப்பட்டது. இந்த கெபியில் வைப்பதற்காக பிரான்ஸ் நாட்டிலிருந்து இயேசுவின் 12 சீடர்கள் உள்ளிட்ட 20 புனிதர்களின் திருப்பண்டங்கள் கொண்டுவரப்பட்டன. திருப்பண்டங்களை பிரான்ஸ் நாட்டில் உள்ள செயின்ட் குளோட் மறை மாவட்ட ஆயர் ஜான் லூக் கரான் மற்றும் திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி மற்றும் திண்டுக்கல் மறை மாவட்ட குருக்கள் பவனியாக எடுத்து வந்தனர். இதன் பின்னர் உயிர்த்த ஆண்டவர் கெபியில் பக்தர்கள் வழிபடுவதற்காக வைக்கப்பட்டது.

Tags

Next Story