ராமநாதபுரத்திற்கு தேமுதிக விஜய பிரபாகரன் வருகை
விஜய பிரபாகரன் வருகை
ராமநாதபுரம் கமுதியில் கட்சி நிர்வாகியின் புதிய இல்ல திறப்பு விழாவிற்கு தேமுதிக விஜய பிரபாகரன் வருகை தந்தார். பின்னர் மேடையில் பேசிய விஜயபிரபாகரன் நான் எந்த மீடியா விலும் இதுவரை பேசியது இல்லை.
முதலில் புண்ணிய பூமி ஆன ராமேஸ்வரம், இராமநாதபுர மாவட்டத்தில் பேசுகிறேன், இதை கேப்டன் ஏற்பாடு செய்துள்ளார். தேமுதிக 2.0 இந்த புனித ஸ்தலத்தில் இருந்து தொடங்கி உள்ளோம். கேப்டன் சராசரி வாழ்க்கை வாழவில்லை, மிகப்பெரிய தலைவராக வாழ்ந்துள்ளார். கேப்டன் உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்கள் நெஞ்சில் உள்ளார்.
நான் என் தந்தையிடம் கேட்டது உங்களுடைய சொத்து வேண்டாம் , நீங்கள் சம்பாதித்து வைத்த தொண்டர்கள் மட்டும் போதும், உங்களுக்காக மட்டும் தான் கேப்டன் எங்களை விட்டு சென்றுள்ளார்.
பிரபஞ்சம் இருக்கும் வரை தேமுதிக என்ற கட்சியும் முரசு என்ற சின்னமும் இருக்கும் சில ஆண்டுகளாக தேமுதிக தோல்வி அடைந்தது என கூறிக் கொண்டிருக்கிறார்கள். ராமநாதபுரத்தில் கட்சி தொய்வு அடைந்ததாக கூறுகிறார்கள், ஆனால் ராமநாதபுரத்தில் பார்த்த போது கேப்டன் புதைக்கப்பட்டு அல்ல விதைக்கப்பட்டுள்ளார்.
இதுதான் உண்மை. தேமுதிக கட்சியினர் இந்த நொடி வரை லட்சக்கணக்கானோர் கஷ்ட பட்டிருக்கிறீர்கள் எதற்காக கேப்டனுக்காக, நமது கட்சிக்காக இதுதான் உண்மையான விசுவாசிகள் இது இருக்கும் வரை தேமுதிக கட்சியில் இருந்து ஒரு செங்கலை கூட பிரிக்க முடியாது. தேமுதிகவில் இருக்கும் தொண்டர்கள் அனைவரும் கஷ்டப்படுபவர்கள், மற்ற கட்சிக்காரர்களைப் போல கையில் காசு இல்லை, தேமுதிக கட்சியினர் இடையே உள்ள உணர்வு மட்டுமே.
மற்ற கட்சியினர் ஆடி பென்ஸ் காரில் போனாலும் தேமுதிக மாருதி காரில் சென்றாலும் சுயமாக சம்பாதித்தது. இத்தனை வருடம் புரிந்து கொள்ளவில்லை என்று கேப்டனின் கோவிலில் வந்து மக்கள் வருத்தப்படுகின்றனர், தப்பு செய்து விட்டோம் என கையை பிடித்து சொல்கின்றனர் ஏனென்றால் இந்த மக்களை ஈசியாக ஏமாற்றி விடலாம். கேப்டன் உங்களுக்கான தலைவர் தேமுதிக மக்களுக்கான கட்சி. நாம் கண்ணாடி போல் இயங்க வேண்டும் நான் எப்படியோ அப்படித்தான் நீங்களும் நீங்கள் எப்படியோ அப்படித்தான் நானும் இருக்க வேண்டும்,
நீங்கள் 100 சதவீதம் உழைக்க உழைக்க கீழே இருப்பவர்கள் அனைவரும் மாறுவார்கள். இந்தத் தேர்தல் எல்லோருமே தேமுதிகவிற்கு அனுதாப ஓட்டு வரும் என சொல்கிறார்கள், தேமுதிகவின் உண்மையான நிலையை நிரூபிக்க வேண்டும், இது தேர்தலுக்கான பேச்சு இல்லை, கேப்டனின் ஆசை, அந்த ஆசையை எல்லோரும் நிறைவேற்ற வேண்டும், எங்க அப்பாவின் தேரை நான் இழுக்க தயார் என் உடன் யார் தேரை இழுக்க தயாராக வருகிறீர்கள். 2024 தேர்தல் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு தேமுதிக தொண்டர்கள் மாற்றி அமைக்க வேண்டும் என பேசி பின்னர் பாம்புல் நாயக்கன் பட்டி கிராமத்தில் கொடியேற்றிய பின்னர் கிளம்பினார்.