நாகாலாந்து ஆளுநர் பழனி கோவிலுக்கு வருகை

நாகாலாந்து ஆளுநர் பழனி கோவிலுக்கு வருகை

கோப்பு படம் 

நாகாலாந்து ஆளுநர் பழனி கோவிலுக்கு வருகை தந்தார்.

புனித நதிகளை அசுத்தமாக்கலாமே தவிர அதன் புனிதம் என்றும் கெடாது என பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்த நாகாலாந்து ஆளுநர் இல .கணேசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் இன்று வருகை தந்தார். பழனி திருக்கோவிலுக்கு சொந்தமான தண்டபாணி நிலையத்திற்கு வருகைதந்த ஆளுநர் இல. கணேசனுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.

Tags

Next Story