உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் ஆட்சியர் ஆய்வு

ராமநாதபுரத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் கீழக்கரை வட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் ஆய்வுசெய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்டத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் கீழக்கரை வட்டப்பகுதியில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மற்றும் கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் கீழக்கரை வட்டார அதிகாரிகள் ஆகியோர் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வேளாண்மை உரக்கிடங்கு, மற்றும் அங்கன்வாடி மையம், திருப்புல்லாணி விஏஓ அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் போன்ற இடத்தில் ஆய்வு செய்த பின்னர் திருப்புல்லாணியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை செல்லும் சுற்றுச்சாலை முதல்வர் திட்டத்தின் கீழ் 5.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பணி செய்யப்பட்ட ரோட்டை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் இதில் தரம் இல்லை என்றும் 15 சென்டிமீட்டர் உயரமுள்ள தார் சாலை கலெக்டர் ஆய்வு செய்ததில் வெறும் ஐந்து சென்டிமீட்டர் மட்டும்தான் உள்ளது .

எனவே இந்த ரோட்டை மீண்டும் புணரமைக்கமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சேதுக்கரையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி கிராமப்புற செவிலியர் மருத்துவ பகுதி மற்றும் புது குடியிருப்பு பகுதியில் உள்ள மக்களை தேடி மருத்துவம் கும்பிடு மதுரையில் பொதுமக்களை அழைத்து அவர்களிடம் குறைகளை கேட்டார். அதற்கு பொதுமக்கள் அடிப்படை வசதிகள் மிக மிக குறைவாக உள்ளதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டினர் ரோடு சரியில்லை இதனால் பள்ளிவாகங்கள் ஊருக்குள் வருவதில்லை, தண்ணீர் ஒரு குடம் ரூ10க்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றோம். இரவு நேரத்தில் பள்ளி மாணவர்கள் வீடு திரும்புவதற்கு போதிய மின் விளக்குகள் இல்லை என்றும் குடிநீர் பல ஆண்டுகளாக வரவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனிடம் கூறினர். உடனடியாக அதிகாரிகளை அழைத்து சரி செய்து தருவதாக அவர்களிடத்தில் உறுதி அளித்தார்.

Tags

Next Story