வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான இலக்கிய கருத்தரங்கம்

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான இலக்கிய கருத்தரங்கம்

கருத்தரங்கம்

வேலூர் காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான இலக்கிய கருத்தரங்கம் நடந்து வருகிறது.
வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான இலக்கிய கருத்தரங்கம் 2 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்கவிழாவுக்கு வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது எழுத்தாளர் மற்றும் கவிஞர்களால்தான் மக்கள் மனதில் தாக்கத்தையும், மாற்றத்தையும் உருவாக்க முடியும். இதனால் சமூகத்தில் நல்ல மாற்றமும், வளர்ச்சியும் இருக்கும். எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் சமுதாயத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டுமானால் மக்கள் அனைவரும் கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் நிறைந்த வளர்ச்சி இருக்கும் என்றார். சிறப்பு விருந்தினராக சாகித்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் ஜெயந்த் கைகினி கலந்துகொண்டு பேசினார். அப்போது இளைய தலைமுறையினரிடையே இலக்கியத்தின் மீது ஆழ்ந்த மதிப்பை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இரக்கக்குணம், சமயோஜித சிந்தனைகளை மக்கள் மனதில் இலக்கியத்தின் மூலம் எளிதாக வளர்க்க முடியும் என கூறினார்.இந்நிகழ்வில், வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story