நாகர்கோவிலில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் நிகழ்ச்சி

நாகர்கோவிலில்  வைட்டமின் ஏ திரவம் வழங்கும் நிகழ்ச்சி

குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடந்தது

குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடந்தது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இராமன்புதூர் திருகுடும்ப ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் இன்று (01.07.2024) அரசு சார்பில் வைட்டமின் எ திரவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் அவர்கள், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் துவக்கி வைத்தனர். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலை வகித்தார். வைட்டமின் எ குறைபாட்டால் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் வைட்டமின் A குறைபாடு பாதிப்பு உள்ளவர்கள் 7 சதவீதம் பேர் உள்ளார்கள்.

மேலும் வைட்டமின் A குறைபாட்டால் வயிற்றுபோக்கு, சுவாச தொற்று, பள்ளி முன்பருவ குழந்தைகளிடையே (3-5 வயது) ஏற்படும் குழந்தைகள் இறப்பை தவிர்க்கவும் இம்முகாம் பயன்படுகிறது. இந்த நிலையில் வைட்டமின் A திரவம் இன்று (01.07.2024) முதல் 31.07.2024 - ஆம் தேதி வரை 6 மாதம் முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், தொடக்கப்பள்ளிகளில் வைத்து கிராம சுகாதார செவிலியர்கள், நகர்புற சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வழங்கப்படும்.

மேலும் குழந்தைகளுக்கு தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் குழந்தைகள் இருக்கும் வீட்டில் ORS பாக்கட் மற்றும் Zinc மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இவ்விரு முகாம்கள் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட 1,23,794 குழந்தைகள் பயன் அடைவார்கள். எனவே, பொது மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.ராம்குமார், அங்கான்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story