காமாட்சி அம்மன் கோவிலில் விடையாற்றி உற்சவம் துவக்கம்

காமாட்சி அம்மன் கோவிலில் விடையாற்றி உற்சவம் துவக்கம்
X

 காமாட்சி அம்மன் 

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவம் கடந்த 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், தினமும் காலை, மாலையில் காமாட்சியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ராஜவீதிகளில் உலா வந்தார். இதன் தொடர்ச்சியாக விடையாற்றி உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. இதில், காலையில் விஸ்வரூப தரிசனமும், மாலையில் காமாட்சியம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்தார்.

தொடர்ந்து சுக்ரவார மண்டபத்தில் ஊஞ்சல் சேவை உற்சவம் நடந்தது. விடையாற்றி உற்சவம் நிறைவு பெறும் நாளான மார்ச் 5 வரை தினமும், இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது. மார்ச் 6ல் புஷ்ப பல்லக்கு உற்சவம் நடக்கிறது. இதில், அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளும், காமாட்சியம்மன் நான்கு ராஜவீதிகளிலும் உலா வருகிறார்.

Tags

Next Story