பாரத பிரதமரின் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா நிகழ்ச்சி
விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா
வல்லநாடு அருகேயுள்ள கலியாவூர் கிராமத்தில் பாரத பிரதமரின் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா - வளர்ச்சி அடைந்த பாரதம் நமது லட்சியம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள கலியாவூர் கிராமத்தில் பாரத பிரதமரின் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா - வளர்ச்சி அடைந்த பாரதம் நமது லட்சியம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் சு.சுமதி தலைமை தாங்கினார். வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ப.வேல்முருகன், கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.மா.இரதி செல்வம் ஆகியோர்கள் முன்னிலை வைத்தார்கள். கலியாவூர் ஊராட்சி மன்ற செயலாளர் க.முத்துகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல், தோட்டக்கலை, சித்த மருத்துவம், காசநோய், கிராம அஞ்சல் ஆகிய துறைகள் சார்ந்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்வில் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா, கிராம அஞ்சல் அதிகாரி ப.மாணிக்க மதுமிதா, கிராம அஞ்சல் ஊழியர் கோபாலகிருஷ்ணன், திருவைகுண்டம் மெயில் ஓவர்சியர் இளங்கோவன் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். செவிலியர் ஜோ. எஸ். மரிய அந்தோணி டாரதி நன்றி கூறினார்.
Next Story