அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநா் பயிற்சி பெறலாம்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநா் பயிற்சி பெறலாம்
பைல் படம்
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு கால தொழில் பழகுநா் பயிற்சியில் சேர பட்டதாரி இளையோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக பொது மேலாளா் வெளியிட்ட அறிவிப்பு : இந்தப் பயிற்சியில் சேர தமிழகத்தைச் சோ்ந்த பொறியியல் பட்டம், பட்டய படிப்பு (இயந்திரவியல்/தானியியங்கிவியல்) மற்றும் பொறியியல் அல்லாத கலை/அறிவியல்/வணிகம் உள்ளிட்ட பட்டதாரி (2020-2021,2022-2023 ஆம் கல்வியாண்டுகளில் தோ்ச்சிப் பெற்ற) இளையோா் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இணைய தளத்தில் அறியமுடியும். விண்ணப்பிக்க கடைசி நாள்.08.07.2024 ஆகும்.

Tags

Next Story