வளர் இளம் பெண்களுக்கு சத்து மாவு வழங்கும் திட்டம்: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு..!
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் வாயிலாக 14 முதல் 18 வயது வரையுள்ள வளர் இளம் பெண்களின் ஊட்டச்சத்து நிலையினை முன்னேற்றம் அடையச் செய்யும் விதமாக, நாளொன்றுக்கு 150 கிராம் வீதம் மாதத்திற்கு 25 நாட்களுக்கு சத்து மாவு வழங்குவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள சங்கரபாண்டியபுரம் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், வளர் இளம் பெண்களுக்கு சத்து மாவு வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.
வளர் இளம் பெண்களுக்கு சத்து மாவு வழங்கும் திட்டத்தின் மூலம் வைக்கும் பள்ளி மாணவிகளுக்கு சத்து மாவு வழங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் 26,634 வளர் இளம் பெண்கள் பயனடைய உள்ளார்கள்.