ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்தவரை நல்லடக்கம் செய்த தன்னார்வலர்கள்
ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்தவரை நல்லடக்கம் செய்த தன்னார்வலர்கள்
தர்மபுரி மாவட்டத்தில் மை தருமபுரி என்கின்ற சமூக சேவை அமைப்பு செயல்பட்டு வருகிறது இதன் மூலம் பல்வேறு சேவைகள் இவர்களின் மற்றொரு துணை அமைப்பான மை தருமபுரி அமரர் சேவை என்று அமைப்பு மூலம் மாவட்டத்தில் ஆதரவற்று இறந்து கிடப்பவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அசாம் மாநிலம் தமுல்பூர் மாவட்டத்தை சேர்ந்த கமல் சோரேன் என்பவர் கேரளாவிற்கு பணிக்காக வந்து கொண்டிருந்தார். தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே தொட்டம்பட்டி ரயில் நிலையம் அருகில் தவறி விழுந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவரது பிரேதத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து விசாரித்ததில் இவரது சகோதரர் கேரளாவில் பணி செய்து வந்தது தெரிந்தது.
மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த இவரது சகோதரருடன் இணைந்து சேலம் இருப்புப் பாதை காவல் நிலைய காவலர் அருள் குமார், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், மை தருமபுரி நிறுவனர் சதீஸ் குமார் ராஜா ஆகியோர் இன்று இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 90 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.