காங்கிரஸ் ஆட்சி அமைய தொண்டர்கள் பாடுபட வேண்டும்- செல்வ பெருந்தகை

தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய தொண்டர்கள் பாடுபட வேண்டும் என செல்வப் பெருந்துகை தொண்டர்களிடையே பேசினார்.

நாமக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்காக மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.இக்கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வபெருந்தகை பேசுகையில்.... தேசிய அளவில் கட்சியை மேலும் வலிமைப்படுத்திட வேண்டிய நடவடிக்கைகளை கட்சி மேற்கொண்டுள்ளது. அதற்கு கட்சி தொண்டர்கள் உறுதுணையாக இருந்து தங்கள் பகுதியில் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக அரும்பணி ஆற்றிய நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, போன்ற முன்னணி தலைவர்களின் தியாகங்களை உணர்ந்து கொண்டு தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி காங்கிரஸ் ஆட்சி அமைய பாடுபட வேண்டும். ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.கர்நாடகா தெலுங்கானா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் கடந்த 57 ஆண்டுகளாக ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற நிலை இருந்து வருகிறது. அந்த நிலையினை மாற்றி காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் கூட்டணி கட்சிகள் நம்மை அங்கீகரிக்கும் வகையில் காங்கிரஸ் தொண்டர்கள் செயல்பட வேண்டும். வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்சிட பெண்கள் இளைஞர்கள் அதிக அளவில் சேர்ந்து கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். இதற்காக கட்சித் தொண்டர்களின் கருத்துக்களை காங்கிரஸ் எப்போதும் செவி கொடுத்து கேட்டு ஏற்றுக் கொள்ளும்.ஜனநாயகத்தை பெருமைப்படுத்தும் காங்கிரஸ் பேரியக்கம், நாட்டின் வளர்ச்சிக்கான கொள்கை, கோட்பாடு, சித்தாந்தங்களை கொண்டுள்ளது. இதனை மக்கள் உணர்ந்துள்ளனர். ஆனால், பாஜகவின் கட்சி வெறுப்பு அரசியலை, அகற்றிவிட்டு இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி தேசிய நெடும் பயணத்தை 6000 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று வந்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு வலிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல ஒவ்வொரு தொண்டர்களும் பணியாற்ற வேண்டும் என்றும் நாமக்கலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்வ பெருந்தகை பேசினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.ராணி, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் இராஜேஷ்குமார், மாநில இளைஞர் அணி காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், மாநில செய்தி தொடர்பாளர் டாக்டர். P.V. செந்தில், நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் பீ.ஏ. சித்திக்,மேற்கு மாவட்ட தலைவர் செல்வக்குமார் உள்பட மாநில, நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story