சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்- அரியலூர் அருகே பரபரப்பு. போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் சோழங்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 22 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை மதியம் வெஜிடபிள் பிரியாணியும், முட்டையும் தயார் செய்யபட்டு 19 மாணவ, மாணவிகளுக்கு வழங்கபட்டுள்ளது. இந்நிலையில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு, மாலை வீடு திரும்பிய உடன் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 18 குழந்தைகள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டனர். இதனால் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு குழந்தை மட்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டது. இதனையொட்டி செந்துறை போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story