பள்ளிப்பட்டு அருகே கிராம மக்களுக்கு வாந்தி, பேதி

பள்ளிப்பட்டு அருகே கிராம மக்களுக்கு வாந்தி, பேதி

மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள்

பள்ளிப்பட்டு அருகே கிராம மக்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டு மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பெருமாநல்லூர் காலனியில் 180 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிராம மக்களுக்கு பைப் லைன்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

தண்ணீர் குடித்த கிராம மக்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக வாந்தி பேதி ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு கிராமத்தைச் சேர்ந்த இளமாறன் (17) தரணி (17), பூர்ணிமா (17) வரதராஜன் (52) கஸ்தூரி (24) ஜெயந்தி (41), ஜெயப்பிரியா (13) உள்பட 10க்கு மேற்பட்டோ வாந்தி, பேதி ஏற்பட்டு மயக்கம் அடைந்ததால்,

அவர்களை குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கிராம மக்களுக்கு பைப் லைன் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனை அடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விரிவாக்கம் நிறுத்தப்பட்டு புதிய பைப் லைன்கள் அமைத்து குடிநீர் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதாகவும் மேலும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தனஞ்செழியன் தலைமையில் மருத்துவ முகாம் அமைத்து கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்து மாத்திரை விநியோகம் செய்யப்படுகிறது.

Tags

Next Story