சீலியம்பட்டியில் எம்எல்ஏ அதிமுகவிற்கு வாக்கு சேகரிப்பு

சீலியம்பட்டியில் எம்எல்ஏ அதிமுகவிற்கு வாக்கு சேகரிப்பு
எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு 
கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார் ஏற்பாட்டில் ஆத்தூர் எம்எல்ஏ ஜெய்சங்கரன் வாக்கு சேகரித்தார்.

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார் ஏற்பாட்டில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் சீலையம்பட்டி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது அதிமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை வகுத்து மக்களுக்கான ஆட்சி நடைபெற்றதாகவும்,

தற்போது திமுக ஆட்சியில் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிப்பதாகவும் விலைவாசி உயர்வு வீட்டு வரி உயர்வு தண்ணீர் வரி உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வால் மக்களை வாட்டி வதைக்கும் திமுக ஆட்சிக்கு தக்க பாடம் புகட்ட வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதை அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Read MoreRead Less
Next Story