திமுக சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

காரிமங்கலம் திமுக கட்சி அலுவலகத்தில் பாலக்கோடு தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டம் காரிமங்கலம் மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளரும் தர்மபுரி தொகுதி வேட்பாளருமான வக்கீல் மணி, பொருளாளர் முருகன், மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் கோபால், மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு எண்ணிக்கை முகவர்களின் பணிகள் மற்றும் செயல்பாடு குறித்து பேசினார். மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கண்காணிப்புடன் கவனத்துடன் செயல்பட கேட்டுக கொண்டார். மேலும் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க பொது முகவராக மூத்த வக்கீல் சந்திரசேகர் தலைமையில் வக்கீல் கோபால் உட்பட பலர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் எவ்வித அச்சமும் இன்றி மிகுந்த கவனத்துடனும் கண்காணிப்புடனும் செயல்பட கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், பஞ்சப்பள்ளி அன்பழகன், முனியப்பன், நகர செயலாளர் வெங்கடேசன், சார்பு அணி நிர்வாகிகள் சண்முகம், கண்ணபெருமாள், மகேஷ் குமார், சந்தர் ஜோதிவேல் ஐ டி விங் சம்பத் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story