வாக்கு எண்ணும் பணி துவக்கம்

வாக்கு எண்ணும் பணி துவக்கம்

தேனி மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் வாக்கு எண்ணும் பணியை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் வாக்கு எண்ணும் பணி துவங்கியது.

தேனி பாராளுமன்ற தொகுதியில் சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு பதிவான வாக்குகள் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் சோழவந்தான் சட்ட மன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,23,864. பதிவான வாக்குகள் 1,67,917. இந்த சட்டமன்ற தொகுதியில் 241 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது.

இங்கு பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 18 சுற்றுகளில் எண்ணப்பட உள்ளன. இதேபோன்று உசிலம்பட்டி சட்ட மன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,78,913. பதிவான வாக்குகள் 1,97,436. இந்த சட்டமன்ற தொகுதியில் 322 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இங்கு பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 23 சுற்றுகளில் எண்ணப்பட உள்ளன. ஆண்டிபட்டி சட்ட மன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,76,027 பதிவான வாக்குகள் 1,95,537 இந்த சட்டமன்ற தொகுதியில் 316 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இங்கு பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 23 சுற்றுகளில் எண்ணப்பட உள்ளன.

பெரியகுளம் சட்ட மன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,87,092 பதிவான வாக்குகள் 1,89,627 இந்த சட்டமன்ற தொகுதியில் 297 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இங்கு பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 22 சுற்றுகளில் எண்ணப்பட உள்ளன. போடிநாயக்கனூர் சட்ட மன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,74,259 பதிவான வாக்குகள் 1,94,777 இந்த சட்டமன்ற தொகுதியில் 315 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இங்கு பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 23 சுற்றுகளில் எண்ணப்பட உள்ளன. அதுபோல கம்பம் சட்ட மன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,82,794. பதிவான வாக்குகள் 1,88,219 இந்த சட்டமன்ற தொகுதியில் 297 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இங்கு பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 22 சுற்றுகளில் எண்ணப்பட உள்ளன. இவற்றில் தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளும் சேர்த்து மொத்தம் 16,22,949 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11,33,513 வாக்குகள் பதிவானது.

இந்த 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 1,788 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 84 மேஜைகளில் 131 சுற்றுகளில் எண்ணப்பட உள்ளன. அதுபோல தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள இந்த 6 சட்டமன்றத் தொகுதியில் பதிவான 9,571 தபால் ஓட்டுக்கள் 8 மேஜைகளில் எண்ணப்பட்டது. இந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story