வாக்கு எண்ணிக்கை மையம் பயிற்சி வகுப்பு - ஆட்சியர் துவக்கி வைப்பு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பாளர், உதவியாளர்கள், நுண்பார்வையாளர்களுக்கான முதற்கட்டபணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்து, பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்- கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பொதுத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 04.06.2024 அன்று கோணம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெறவுள்ளது. மேற்படி வாக்கு எண்ணும் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு கலக்கல் முறையில் முதற்கட்ட பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு (1st Randomization), வாக்கு எண்ணிக்கை பணிக்கு நியமிக்கபட்ட நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார். நடைப்பெற்ற கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தூர் ராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.