நீலகிரி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மைய பணி தீவிரம்

நீலகிரி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மைய பணி தீவிரம்

வாக்கு எண்ணிக்கை மைய பணிகள் தீவிரம்

நீலகிரி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடந்தது. ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலை சுமுகமாக நடத்த தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி வாக்குச்சாவடி மையம் அமைத்தல், வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்தல்,

வாக்காளர்களுக்கு பூத் ஸிலிப்புகள் வழங்குதல், தபால் ஓட்டு பெறுதல் உள்ளிட்ட பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. நீலகிரி தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கூடலூர், கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் என 6 சட்டமன்றங்கள் அடங்கிய நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமாக ஊட்டியில்,

உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இங்குள்ள வாக்கு என்னும் அறை, பொருள்கள் பாதுகாப்பு அறை, வாக்கு பெட்டிகள் வைக்கும் ஸ்டிராங்க் அறை, முகவர்கள் நடந்து வரும் பாதை, கண்காணிப்பு கேமரா பொருத்துதல் மற்றும் குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

பாதுகாப்பு தடுப்பு வேலைகள் அமைத்தல் உள்பட அனைத்து பணிகளும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி நடந்து வருகிறது. அடுத்த ஒரு சில வாரங்களில் இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story