மோடியை வீட்டுக்கு அனுப்ப வெயிலை பொருட்படுத்தாமல் வாக்குபதிவு - ஈவிகேஎஸ் இளங்கோவன்

மோடியை வீட்டுக்கு அனுப்ப வெயிலை பொருட்படுத்தாமல் வாக்குபதிவு - ஈவிகேஎஸ் இளங்கோவன்
X

 வாக்கு செலுத்திய ஈவிகேஎஸ் இளங்கோவன் 

மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் வாக்குபதிவு செய்து மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோட்டில் கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தனது மனைவி வரலட்சுமி மற்றும் மகன் சஞ்சய் சம்பத்துடன் வாக்குபதிவு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன்: மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் வாக்குபதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.,கடந்த தேர்தலை விட இந்த வாக்குபதிவு சதவீதம் அதிகரிக்கும் என தெரிவித்தார்.

Tags

Next Story