தங்கமான வேட்பாளர் தங்கவேலுக்கு இரட்டை இலையில் வாக்களியுங்கள்:எம்ஆர்வி

தங்கமான வேட்பாளர் தங்கவேலுக்கு இரட்டை இலையில் வாக்களியுங்கள்:எம்ஆர்வி

வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் 

தங்கமான வேட்பாளர் தங்கவேலுக்கு இரட்டை இலையில் வாக்களியுங்கள் என எம்ஆர்வி தெரிவித்துள்ளார்.

கரூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் தங்கவேல். இவருக்கு ஆதரவாக இன்று க.பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாலப்பாளையம், புதுக்கநெல்லி, மேல் நெடுங்கனூர் பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று முன்னாள் அமைச்சரும் அதிமுக கரூர் மாவட்ட செயலாளர் ஆன எம் ஆர் விஜயபாஸ்கர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அப்போது வேட்பாளர் தங்கவேளை பற்றி குறிப்பிடும் போது வேட்பாளர் எப்போதும் சிரித்த முகத்துடன் தான் இருப்பார். தங்கத்தைப் போலவே இருக்கும் வேட்பாளர் தங்கவேலுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டும் என அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story